உதகையில் துவங்கியது குறும்பட விழா
ஊட்டியில் குறும்பட விழா இன்று துவங்கியது.
உதகையில் மூன்றாம் ஆண்டு சர்வதேச குறும்பட திருவிழா இன்று துவங்கியது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 120 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக முதன் முறையாக நீலகிரியிலுள்ள படுகர், தோடரின மக்களின் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதன் துவக்க விழாவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவக்கி வைத்தார்.
நீலகிரி பிலிம் கிளப் மற்றும் PC TV நெட்வொர்க் மூலம் இந்த சர்வதேச குறும்பட விழா நடத்துகிறது. ஊட்டியில் உள்ள அசெம்பிளி திரையரங்கில், டிச 3 இன்று முதல் டிசம்பர் 5 வரை மூன்று நாள் திரைப்பட விழாவாக நடைபெறவுள்ளது. OSFF ஆனது, நீலகிரி ஃபிலிம் கிளப்பால் 2016 இல் ஊட்டியில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி இலாப நோக்கமற்ற கிளப் ஆகும். NFC தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் திரைப்பட விழாக்களை நடத்தியுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்ட பின் நீலகிரி ஆட்சியர் கூறும்போது நீலகிரி மாவட்டத்தில் 3 ம் ஆண்டு இந்த குறும்பட திருவிழா நடைபெறுகிறது. சினிமா துறையில் சாதிக்க விரும்புவோருக்கான சிறந்த தளமாக இது அமையும். வெற்றி பெறுவோர்க்கு யானை விருதும் உள்ளூர் திறமைசாலிகளுக்கான Sullivan என்ற புதிய விருதும் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இவ்விழாவை திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கெளதம் வாசுதேவ் மேனன் சிறந்த படங்களை தேர்வு செய்கிறார். OSFF மூன்று நாட்களில் 30 நாடுகளில் இருந்து 118 குறும்படங்களை திரையிடப்படவுள்ளது. திரையிடலுக்கு இணையாக, கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகருக்கான யானை விருதை தலைமை விருந்தினர்கள் வழங்குவார்கள். இந்த ஆண்டு, உள்ளூர் திறமைகளை ஆதரிக்க புதிய விருதுகள்Jones Sullivan Award என்ற பெயரில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விருது நீலகிரியில் கலை மற்றும் கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த நபர்கள் மற்றும் உள்ளூர் திரைப்பட கலைஞர்களுக்கானது இங்கு நடைபெறும் சர்வதேச குறும்பட விழாவிற்கு அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக படங்களை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu