உதகை ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் வேடமணிந்து சிவசேனா கட்சியினர் மனு

உதகை ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் வேடமணிந்து சிவசேனா கட்சியினர் மனு
X


விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க கோரி  சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் வேடமணிந்து வித்தியாசமான முறையில் உதகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

செப்10 ல் விநாயகர் சதுர்த்தி நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டுமென சிவசேனா கட்சியினர் மனு அளித்தனர்.

செப்டம்பர் 10-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கொட்டும் மழையில் விநாயகர் வேடமணிந்து நீலகிரி மாவட்ட சிவசேனா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட சிவசேனா கட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார், நகர செயலாளர் சுதாகர், நகர தொழிலாளர் அணி அமைப்பாளர் சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!