உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா
X

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தலில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மகா சிவராத்திரி விழா இன்று மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் தொடங்கி மகா பிரதோஷம் நடந்தது.

காசி விசுவநாதர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. காசி விஸ்வநாத சுவாமிக்கு நான்கு கால பூஜை, சிறப்பு யாக பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. காசி விஸ்வநாதர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவராத்திரி விழாவையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags

Next Story
highest paying ai jobs