உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம்

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம்
X

உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பில் தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளையினர் பாராட்டு கேடயம் வழங்கினர்.

உதகையில் உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கொரோனா காலத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டும் கேடயமும் வழங்கப்பட்டது.

உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டும் சான்றுகளும் வழங்கப்பட்டன. அதன் பின்பு தமிழர்களின் கலாச்சாரத்தை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொரோனா காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய தன்னார்வலர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதோடு, நீலகிரியில் பல சமூக பணிகளை செய்த தன்னார்வலர்களுக்கு கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை தலைவர் ராஜா தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!