சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
X

தண்டனை விதிக்கப்பட்டவர். 

உதகை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). கடந்த 11.3.2018 அன்று பழங்குடியின சிறுமியை, வனப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வெங்கடேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, குற்றவாளி வெங்கடேசுக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றொரு பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார். தொடர்ந்து வெங்கடேசை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்