பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 37 ஆண்டு சிறை விதித்த உதகை கோர்ட்

பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 37 ஆண்டு சிறை விதித்த உதகை கோர்ட்
X

மைக்கேல்

போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் 37 வருடம் சிறை தண்டனையும், 7000 அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு.

கடந்த 2019-ம் ஆண்டு உதகை அருகே மஞ்சூர் பிக்கட்டி இன்கோ டீ தொழிற்சாலை பணி புரிந்து வந்த மைக்கேல் (எ) மணிகண்டன், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக பெண்ணின் தாய் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில், மைக்கேல் மீது, உதகை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று உதகையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் 37 வருடம் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார். பின்னர் குற்றவாளியை கோவை மத்திய சிறைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!