உதகையில் இயற்கை வேளாண்மை குறித்த விசாயிகளுக்கான கருத்தரங்கு

மாநில வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் பேசியபோது .
தமிழக நிதி நிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து 3400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இயற்கை வேளாண் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறினார்.
உதகையில் இன்று ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் நடைபெற்ற அங்கக வேளாண் கருத்தரங்கில் உரையாற்றி அவர், நீலகிரி மாவட்டத்திலுள்ள 72500 விவசாயிகளில் 7100 விவசாயிகள் இயற்கை வேளாண் விவசாயத்திற்கு மாறியிருப்பதாகவும், இதன் மூலம் இயற்கை வேளாண் திட்டத்தை செயல்படுத்துவதில் நீலகிரி தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாகத் திகழ்வதாக கூறினார்.
இயற்கை வேளாண் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
கருத்தரங்கிற்கு தலைமையுரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கீர்த்தி பிரியதர்ஷினி, இயற்கை வேளாண் சாகுபடி முறைகள் மண் வளத்தை பாதுகாப்பதோடு, விளை பொருட்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதாகவும், இதன் காரணமாக நமது பயணம் மரபு சார்ந்த பயணமாக மாறி வருவதாக கூறினார்.
இயற்கை வேளாண் விளை பொருட்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் உழவர் சந்தைகளில் தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும் என நீலகிரி மக்களை உறுப்பினர் திரு ஆ.ராசா கூறினார்.
சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ், தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி சிபிலா மேரி, உதகை ஊராட்சி மன்ற தலைவர் மாயன் உட்பட திரளான விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட இதில் பல தரப்பட்ட இயற்கை வேளாண் விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu