உதகையில் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு

உதகையில் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு
X

குழுக்கள் முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டது.

நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி எடுத்து சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.02.2022 அன்று நடைபெறுகிறது. 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இரண்டாவது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது.

போட்டியின்றி தேர்வான 3 வார்டுகளை தவிர்த்து பிற வார்டுகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி எடுத்து சென்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture