உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
X

ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

வணிகர்கள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க உதகை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று கடைகளில் திடீரென சோதனை நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகர்நல அலுவலர் பொறுப்பு, ஸ்ரீதர், துப்புரவு ஆய்வாளர் மகாராஜன் மற்றும் பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

3 குழுக்களாக பிரிந்து உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 900 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமின்றி பிற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, வணிகர்கள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!