உதகையில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

உதகையில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
X

பறிமுதல் செய்யப்பட்ட  மீன்கள்.

உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100 கிலோ கெட்டுப் போன மீன்கள் அழிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட மீன் கடைகளில் பழைய மீன்கள் விற்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்த நிலையில், உதகை, குன்னூர் கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்நிலையில் உதகை நகரில் கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் மீன் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 10க்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் கெட்டுப்போன மீன்களை பினாயில் ஊற்றி அழித்தனர். பின்பு அதிகாரிகள் கூறும் பொழுது கெட்டுப்போன மீன்களை விற்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் இதுபோல் மீண்டும் தொடர்ந்தால் மீன் கடைகாரர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil