உதகை நகராட்சி மார்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு

உதகை நகராட்சி மார்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு
X

உதகை மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி வருவாய் அலுவலர்

கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் பொருட்களை வைக்க வேண்டும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

உதகை நகராட்சி மார்க்கெட்டில் கடைகளுக்கு முன்பு வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்து விற்பனைப் பொருட்களை வைத்து உள்ளனர். இதனால் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ், அலுவலர்கள் மார்க்கெட் கடைகளில் ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் பொருட்களை வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்து வழியில் பொருட்களை வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!