நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளில் பிடிபட்ட தொகை மீண்டும் ஒப்படைப்பு

நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளில் பிடிபட்ட தொகை மீண்டும் ஒப்படைப்பு
X

பைல் படம்.

நீலகிரியில் 43,89,760 ரூபாய் உரியவர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நடந்தது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 15 உள்ளாட்சி அமைப்புகளில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.

தேர்தல் முடிந்ததால் மாதிரி நடத்தை விதிமுறைகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் மறைக்கப்பட்ட முதல்-அமைச்சர், முன்னாள் முதல்-அமைச்சர் படங்கள் திறக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி நீலகிரியில் பறக்கும் படை சோதனையில் 50,000 ரூபாய்க்கு மேல் ஆவணம் இன்றி கொண்டு சென்ற 50 பேரிடம் இருந்து 51,24,760 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கருவூலங்களில் ஆவணங்களை சமர்ப்பித்து 43,89,760 ரூபாய் உரியவர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story