உதகை படகு இல்லத்தில் மீட்புப்படகு சோதனை ஓட்டம்

உதகை படகு இல்லத்தில் மீட்புப்படகு சோதனை ஓட்டம்
X
உதகையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை மீட்க, சிறப்பு தளவாடங்களோடு கூடுதலாக புதிய படகு ஒதுக்கப்பட்டு உள்ளது

நீலகிரி மாவட்டம், உதகை தீயணைப்பு நிலையத்துக்கு, பெட்ரோல் மூலம் இயங்கும் புதிய மீட்புப்படகு வரவழைக்கப்பட்டு உள்ளது உதகை படகு இல்லத்தில் உள்ள இந்த புதிய மீட்பு படகு சோதனை ஓட்டம், இன்று நடத்தப்பட்டது. ஏரியில் நடந்த சோதனை ஓட்டத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரா.ஜெகதீஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகில் சென்று இயக்கி பார்த்தனர். நிலைய அலுவலர்கள் பிரேமானந்தன், ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த படகின் மூலம், வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பு படகில் சென்று 4 பேரை மீட்டு வரலாம். பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அதில் சிக்கியவர்களை மீட்க சிறப்பு தளவாடங்களோடு கூடுதலாக புதிய படகு ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!