யோகா ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்க கோரிக்கை

யோகா ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்க கோரிக்கை
X

பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

உதகையில் யோகாவில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர்களின் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் கண்ணன் மற்றும் பொதுச்செயலாளர் காசிநாததுரை ஆகியோர் கூறுகையில், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டயம் முடித்த யோகா ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனை மற்றும் பள்ளிகள் என பல்வேறு துறைகளில் யோகாவில் பயிற்சி முடித்து பட்டம் பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 8ஆம் தேதி அன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் சரஸ்வதி, ராஜேஷ் மற்றும் யோகா ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!