உதகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

உதகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை
X

பைல் படம்.

நகரில் முக்கிய சாலைகளில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடிய வரைபட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை.

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உதகை நகரிலிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் தெரியாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக ஒவ்வொரு சந்திப்புகளிலும் பணியில் ஈடுபடும் காவலர்கள் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கே சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக்கூடிய சாலை தெரியவில்லை என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குன்னூர் சாலையில் உள்ள தலையாட்டுமந்து நான்குமுனை சந்திப்பில் உதகை நகருக்குச் செல்ல கூடிய மாற்றுப்பாதை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டால் வாகன நெரிசல் தவிர்க்கப்படும். இதனால் நகரில் பல பகுதிகளில் வாகன நெரிசல் இருக்காது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே உதகையில் இருந்து மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்புகளில் வரைபடத்துடன் கூடிய அறிவிப்புப் பலகைகளை வைத்தால் வாகன நெரிசல் தவிர்க்கப்படுவதோடு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அந்தந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself