நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்
X

பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் ஊழியர்கள்.

பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீலகிரி மாவட்டத்தில் உதகை முதல் கல்லார் வரை உள்ள ரயில் பாதையில், சுற்றுலா பயணிகள் மற்றும் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட ரயில் தண்டவாளங்களை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் உள்ள மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ரயில் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் ரயில் பாதையை கடக்கும் யானைகள், அதனை உண்டு பாதிக்கப்படுவதாகவும், ரயில் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மூலம் உதகை முதல் கல்லார் வரை உள்ள மலை ரயில் பாதையை 2 நாட்கள் சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது. உதகை நகராட்சி சார்பில், உதகை முதல் லவ்டேல் ரயில் நிலையம் வரை தண்டவாள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் அகற்றப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை ரயில் தண்டவாளம் பகுதியிலும், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வெஸ்வரி தலைமையில் குன்னூர் மற்றும் கேத்தி ரயில் தண்டவாளம் பகுதியிலும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் தலைமையில் லவ்டேல் சந்திப்பு பகுதியிலும் மற்றும் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் வனத்துறை, தன்னார்வலர்கள் என மொத்தம் 360 பேர் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!