/* */

உதகை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு, உதகை தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல தரப்பு மக்களும் தங்களின் இயல்பு வாழ்க்கையை மறந்து பொருளாதார ரீதியில் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து பல குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கு பல தரப்பினரும் உதவி வருகின்றனர்.

அவ்வகையில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு, ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, தென்றல் வியாபாரிகள் சங்கத்தினர் எடுத்துவரும் நிவாரண தொகுப்பு வழங்கும் பணியானது போற்றுதலுக்குரியது என்றார்.

காய்கறி தொகுப்புகளை பெற்ற மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, இதுவரை தங்களுக்கான நிவாரணம் எதுவும் கிடைக்காத நிலையில், முதன்முறையாக மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் காய்கறி தொகுப்புக்கள் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தென்றல் உதகை நகர மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கே.ஏ. முஸ்தபா, செயலாளர் ரவிக்குமார், தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் இச்சு பாய், செயலாளர் கே எம் மணிகண்டன் ,பொருளாளர் சபரிஷ், செயற்குழு உறுப்பினர் சானு, அஸார், மல்லி செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jun 2021 4:10 PM GMT

Related News