பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள்

பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள்
X

பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆர்டிஓ அலுவலர்கள்.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் பேருந்துகளை ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று உதகை அரசு கலைக் கல்லூரியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 286 பள்ளிகளிலுள்ள வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு பணியை வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மேற்கொண்டார். இதில் வாகனத்தின் தரைதளம், படிக்கட்டுகள், மேற்கூரைகள், வாகனத்தின் சக்கரங்கள் மற்றும் பிரேக் மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட அனைத்து தரம் மற்றும் வசதிகள் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும் வகையில் வேக கட்டுபாட்டு கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளபட்டது.

குறிப்பாக மலைப் பகுதி என்பதால் பள்ளி வாகன ஓட்டுநர்கள் அனைவருகளுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆட்டோக்களில் 5 மாணவர்களுக்கு மேல் ஏற்றி செல்லக் கூடாது என்றும், இதற்காக அடுத்த வாரத்தில் பெரிய மாஸ் சோதனை செய்யப்படும் என்றும், அதிகமாக மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்