நீலகிரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்
கோப்புப்படம்
15 அம்ச கோரிக்கைகளைநீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிபக் கழகம், மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், தரமற்ற பொருட்களுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் எந்திரங்கள் பழுதானால் ஏற்படும் நிதி இழப்பிற்கு விற்பனையாளரிடம் வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பு வங்கி, ரேஷன் கடைகள் முன்பு ஒட்டப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகள், ரேஷன் கடைகளின் சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த போராட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கிகளில் கடன் வழங்குவது, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu