உதகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
Mazhai Neer Segaripu
Mazhai Neer Segaripu-தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கடந்த 4-ந் தேதி முதல் இன்று வரை மழைநீர் சேகரிப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, உதகையில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, பொதுமக்கள் கூடும் பகுதிகளான பஸ் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனம் மூலம், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மழைநீரை நேரடியாகவோ அல்லது நிலத்தடியில் செலுத்தி எப்படி சேமிப்பது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழைநீர் சேகரித்தல் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மழைநீரை வீணாக்காமல் பொதுமக்கள் சேமிக்கும் பொருட்டு வீட்டு மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருக்கவும், சேமிப்பு கிணற்றில் கசடுகளை அகற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சர்மிளா பெய்லின் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu