வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: நீலகிரி மாவட்ட நிர்வாகம் உஷார்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: நீலகிரி மாவட்ட நிர்வாகம் உஷார்
X

மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தையொட்டிய நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் பகுதியில் நேற்று 8 செ மீ மழை, இன்று காலை 7 செ.மீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், மாவட்டத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக, முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தியதாகவும், மழையினால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு எந்த வகையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில், ஆங்காங்கே மீட்பு குழுக்களை தயாராக வைக்குமாறு கூறியதாகவும் கலெக்டர் கூறினார்.

கூடலூர், பந்தலூர் பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், 287 கி.மீ தூரத்திற்கு நீர் நிலைகள் தூரெடுக்கப்பட்டதன் விளைவாக, வெள்ளநீரினால் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்ற கலெக்டர், தற்போது 456 வெள்ள பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் சூழல் ஏற்படவில்லை. மழை நீடித்தால் நாளை வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!