நீலகிரி மாவட்டத்தில் நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது.

தேர்தலுக்காக நீலகிரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளை இறுதி செய்வது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொருட்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story