உதகையில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
உதகை நகரில் 33வது வார்டு H M T, நொண்டிமேடு சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சாலையை செப்பனிடக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், நாள்தோறும் இச்சாலையில் பணிக்கு செல்வோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். இதுமட்டுமல்லாமல் முதல்வரின் தனிப்பட்ட துறைக்கு மனு அளித்தும் இதுநாள் வரையில் சாலைக்கான தீர்வு கிடைக்கவில்லை.
இந்த சாலை, 16 அடி அகலம் கொண்டது, தற்போது, 8 அடி அளவு கொண்ட சாலையாக உள்ளது இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மருத்துவமனைக்கு அவசர காலத்தில் செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் வயதானவர்கள் என அனைவரையும் இச்சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதை அடுத்து, சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முறையான மனு அளித்து சாலையை சரி செய்வதற்கான தீர்வை காண வலியுறுத்தினர். ஆனால், இதுவரை கொடுத்த மனுவிற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், உடனடியாக சாலையை சீரமைக்க வில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu