நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
X
நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஒத்திகை உதகை அருகே எம்.பாலாடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் நடந்தது. பள்ளி, கல்லூரிகளில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை எவ்வாறு அணைப்பது, தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்துவது எப்படி, சமையல் கியாஸ் சிலிண்டர் தீ விபத்தை அணைப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இடி, மின்னலின் போது தீ விபத்துக்களை தவிர்ப்பது, மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil