உதகையில் வாட்டர் ATM முறையாக செயல்பட வேண்டும் என கோரிக்கை

உதகையில் வாட்டர் ATM முறையாக செயல்பட  வேண்டும் என கோரிக்கை
X
வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்துள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கடைகளில் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை அமலில் உள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்கள், பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என 70 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ரூபாய் 5 நாணயத்தை செலுத்தி 1 லிட்டர் குடிநீர் பிடிக்கலாம். தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வர தொடங்கி உள்ளனர்.

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குடிநீர் தேடி அலைகின்றனர். சுற்றுலா தலங்களில் உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களில் குடிநீர் வராததால் ஏமாற்றம் அடைகின்றனர்.

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்து உள்ளனர்.

ஊட்டியில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை இல்லை. குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பராமரிப்பு இன்றி உள்ளது.

அதில் நாணயம் போட்டும் குடிநீர் வருவது இல்லை. சுற்றுலா வந்த நாங்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வருகிறோம். குடிநீர் எந்திரங்களை பராமரித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Tags

Next Story