உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

கடன் உதவிகளை வழங்கிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புகழாரம்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 600 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2 கோடியே 7 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுயஉதவி குழுக்கள் மிக சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் தேயிலைத் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து தரமான தேயிலையை உற்பத்தி செய்து விற்று வருவதாக பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil