உதகையில் ஆதரவற்றோருக்கு உணவு உடைகள், அடைக்கல அறக்கட்டளை வழங்கல்

உதகையில் ஆதரவற்றோருக்கு உணவு உடைகள், அடைக்கல அறக்கட்டளை வழங்கல்
X

உகை முள்ளிக்கொரை உள்ள  ஆதரவற்றோருக்கு அடைக்கல அறக்கபட்டளை சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

உதகை அருகே முள்ளிக்கொரையில் உள்ள ஆதரவற்றோருக்கு, அடைக்கல அறக்கட்டளை சார்பாக உணவு, உடை போன்ற நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏழைகளின் அடைக்கல அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சனிடைசர், முக கவசம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உதகை முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுமார் 103 பேருக்கு ஏழைகளின் அடைக்கல அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் இன்று காலை உணவு மற்றும் உடைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நாகராஜ், ஏ.எஸ் நாதன், ஜேசுதாஸ் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story