திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு பரிசு

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு பரிசு
X

பைல் படம்.

மாணவ, மாணவிகள் தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

கடந்த 2018-2019-ம் ஆண்டு முதல் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு, தலா ரூ.10,000 பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 2021-2022-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

உரிய விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள உதகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0423-2449251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்