உதகையில் இன்றுமுதல் காய்கறி விலைப்பட்டியல் கட்டாயம்

உதகையில் இன்றுமுதல் காய்கறி விலைப்பட்டியல் கட்டாயம்
X

உதகையில், நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அனைத்து வாகனங்களிலும் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், காய்கறிகள், பழங்கள், விற்பனை செய்வோர், விலை பட்டியலோடு விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது.

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், அதனை மேலும் ஒரு வாரத்திற்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. பொதுமக்களுக்கான காய்கறிகள் ,பழங்கள், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து விலைப்பட்டியல் இல்லாமல் விற்பனை செய்யும் வாகனங்கள் பாஸ் ரத்து செய்யப்படும் என, ஆட்சியர் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இன்று உதகை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில், காய்கறிகள் பழங்களை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு விலை பட்டியல் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளபடி, விலைப்பட்டியலோடு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விலைப்பட்டியலும் வாகனங்களில் ஒட்டப்பட்டன.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும்போது, மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி காய்கறிகள் விற்பனை செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மீண்டும் வாகனத்திற்கு பாஸ் வழங்கப்படாது என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!