நீலகிரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை : பாதுகாப்பு ஒத்திகை
உதகையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை
நீலகிரி : உதகை
நாளை பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக உதகைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை யொட்டி உதகையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் ராணுவ பயிற்சி மையம் மற்றும் உதகை ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தர உள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 9 மாவட்டங்களிலிருந்து ஆயிரத்து 300 காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் நாளை பிற்பகலில் உதகைக்கு வருவதையொட்டி உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முதல் ராஜ்பவன் வரையிலும் மற்றும் ராஜ்பவன் முதல் ராணுவ பயிற்சி மையம் வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது உதகை நகர் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu