சார் நிலை பதவிக்கான எழுத்துத் தேர்வு நாள் ஒத்திவைப்பு

சார் நிலை பதவிக்கான எழுத்துத் தேர்வு நாள் ஒத்திவைப்பு
X
புள்ளியியல் சார்நிலைப் பணி தொடர்பான எழுத்துத் தேர்வு வருகிற 11-ம் தேதி உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் நாளை நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 11-ம் தேதி காலை மற்றும் மதியத்துக்கு மேல் உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்கும் அனைத்து தேர்வர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர், தேர்வுகள் இணை ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture