உதகையில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்பாட்டம்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் உதகையில் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் ராம தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 18 மாத காலம் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பணிக்கு வர முடியாத ஊழியர்களின் விடுப்பை பணிக்காலமாக கருத வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், உயிரிழந்த ஊழியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu