உதகையில் அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உதகையில் அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

உதகையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அஞ்சல் ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

அஞ்சல் ஊழியர்களை வணிக இலக்கு என்ற பெயரில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை அடைய வேண்டும் என நெருக்கடி கொடுப்பதை கண்டித்து அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் உதகையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் ஜெயக்குமாரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சேமிப்பு கணக்கு, காப்பீடு, தங்க பத்திர திட்டம், ஆதார் சேவை போன்ற தபால் துறை திட்டங்களுக்கு அதிக இலக்குகளை அடைய சொல்லி கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், இதனால் ஊழியர்கள், தபால்காரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அன்றாட தபால் பட்டுவாடா பணி பாதிக்கப்படுகிறது. எனவே, அஞ்சல் ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!