உதகையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது

உதகையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது
X

நீலகிரி மாவட்டம் உதகையில் வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட்டன.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு 21 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் பொங்கல் சிறப்பு தொகுப்பை துவக்கி வைத்த பின் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!