நீலகிரி: அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்

நீலகிரி: அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து முகாம்.

மொத்தம் 777 மையங்களில், 5 வயதுக்கு உள்பட்ட 40, 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து முக்கிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்கிறார்கள். மேலும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, மாவட்ட மற்றும் மாநில எல்லைப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயா் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 777 மையங்களில், 5 வயதுக்கு உள்பட்ட 40, 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!