உதகையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம்

உதகையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம்
X

சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார்

உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக உதகை நகரில் சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட், தமிழக விருந்தினர் மாளிகை செல்லும் சாலை என அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் உள்ளனர்.

தமிழக விருந்தினர் மாளிகை சாலையில் மேற்பட்டோர் ஹெல்மெட் சீட் பெல்ட், அணியாமல் பயணித்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!