வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
X

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 36 வார்டுகளில் 198 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

99 வாக்குப்பதிவு எந்திரங்கள், 99 கட்டுப்பாட்டு எந்திரங்கள் உதகை நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

பட்டனை அழுத்தி சின்னம் பதிவாகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. இந்த பணி முடிந்து எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai business transformation