உதகையில் மேற்கு மண்டல ஐஜி தலைமையில் காவலர் குறைதீர் நிகழ்ச்சி
ஆயுதப்படை காவலர்களுக்கான ஆயுதங்களையும் பார்வையிடும் ஐஜி சுதாகர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு காவல் துறையில் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை குறித்த ஆய்வினை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்கொண்டார். ஆயுதப்படை காவலர்களுக்கான ஆயுதங்களையும் பார்வையிட்டு அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த துளிர் எனும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தை திறந்து வைத்தார்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரு ஆண்டுகளில் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், மாணவர்கள் என சராசரியாக 250 பேர் ஆண்டிற்கு தற்கொலை செய்திருப்பதாகவும் அவர் கூறினார். பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு ஆளாபவர்களை கண்டறிந்து இந்த மையம் மூலம் ஆலோசனை வழங்கப்படும் என்றும், தற்கொலை சம்பவங்களை தடுக்க 24 மணிநேரமும் செயல்படும் துளிர் உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தற்கொலை சம்பவங்கள் கணிசமாக குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu