உதகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க திட்டம்

(மாதிரி படம்)
நீலகிரி மாவட்டம் ஊட்டி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏப்ரல், மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர்.
உதகை-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உதகை நகரில் சுற்றுலா வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை. இதனால் ஆண்டுதோறும் சீசனில் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் உதகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக ஏ.டி.சி. பகுதியில் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஹைட்ராலிக் முறை மூலம் கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
உதகையில் ரூபாய் 20 கோடி மதிப்பில் மல்டிலெவல் பார்க்கிங் அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.210 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் ஹைட்ராலிக் முறை மூலம் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. வாகன நிறுத்து மிடத்தில் சுற்றுலா பயணிகள், டிரைவர்களுக்காக கழிப்பிடம், ஓட்டல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. கட்டண முறையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu