தெய்வீக காசி, ஒளிமயமான காசி நிகழ்ச்சி கொண்டாட திட்டம்
பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி. முருகானந்தம்.
பாரத பிரதமரின் கனவு திட்டமான தெய்வீக காசி ஒளிமயமான காசி என்ற நிகழ்ச்சியை நாடு முழுக்க மாபெரும் நிகழ்ச்சியாக மத்திய அரசாங்கம் நடத்த இருக்கிறது என பா.ஜ.க. தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் தெரிவித்தார். அதை நிறைவேற்றுகின்ற வகையில் பல்வேறு செயல்களை இணைக்கின்ற வகையிலே சிவபெருமானின் 12 ஜோதிலிங்கதிலும் ஒன்றான காசி விஸ்வநாத சுவாமி கோயிலை புனரமைத்து அதை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்தி, வளப்படுத்தி புராதான நகரமான காசியை உலக அறியும் வண்ணம் பணிகளை செய்ய இருக்கின்றது.
காசி தமிழகத்திலுள்ள மக்கள் மட்டும் செல்லும் இடமாக அல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் கூட புனித இடமாக கருதி காசிக்கு வருகை புரிகின்றனர். எதிர்வரும் 13ஆம் தேதி காசியிலே மிக பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தர்ம மகான்கள், சாதுக்கள், அறிவுசார் வல்லுநர்கள், மாநில முதலமைச்சர்கள் , துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலத்தின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாரதத்தின் தனித்துவமான சமூக நல்லெண்ணத்தையும் ஒருமைப்பாட்டையும், கலாச்சாரத்தையும், பிரதிபலிக்க கூடிய மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் கொண்டாட அனைத்து மக்களும் அறியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ், உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu