உதகையில் உதகையில் செய்திமக்கள் தொடர்புத்துறைசார்பில் புகைப்படகண்காட்சி

உதகையில் உதகையில் செய்திமக்கள் தொடர்புத்துறைசார்பில் புகைப்படகண்காட்சி
X

சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்துவைத்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் திறந்து வைத்தனர் .

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.

இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்