நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளை 8 ம் கட்ட தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளை 8 ம் கட்ட தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 318 நிலையான கொரனோ தடுப்பூசி மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு முகாமுக்கு 4 பேர் வீதம் மொத்தம் ஆயிரத்து 352 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

தடுப்பூசி செலுத்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 414 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர்.

3 லட்சத்து 64 ஆயிரத்து 805 பேர் 2-வது டோஸ் போட்டுக் கொண்டனர். மொத்தம் இதுவரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தகுதியான நபர்கள் தடுப்பூசி செலுத்தி, தங்களை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஆவன செய்ய வேண்டும்.

இதன்மூலம் கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இந்த தகவலை நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!