T23 புலி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு பணி வழங்க ஆட்சியரிடம் மனு

T23 புலி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு பணி வழங்க ஆட்சியரிடம் மனு
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த T23 புலி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினர்.

T23 புலி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நான்கு மனித உயிர்களையும் மற்றும் முப்பதிற்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற T23 புலியானது 15 நாட்களுக்கு பிறகு பிடிபட்டு மைசூர் உயிரியியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூடலூர் அருகே தேவர்சோலைப்பகுதியில் தேவன் எஸ்டேட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை கடந்த செப்டம்பர் 25-ம் தேதி T23 புலி தாக்கியதில், படுகாயம் அடைந்தவர் உதகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் தேவர் சோலை பகுதியில் ஊர் பொது மக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட வன அலுவலர் மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சு வார்த்தையின் போது இறந்த சந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணி வழங்காததை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட சந்திரன் குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மனு பெட்டியில் மனு அளித்தனர்.

இதனால் மாவட்ட வன அலுவலர் மற்றும் வருவாய்த்துறை கோட்டாட்சியர் உறுதியளித்தது போல் உடனே தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டுமென கோரிக்கை அளித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil