நீலகிரியில் மினி கிளினிக்கில் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு

நீலகிரியில் மினி கிளினிக்கில்  ஊழியர்கள் கலெக்டரிடம் மனு
X

 உதகை கலெக்டர் அம்ரித்திடம் கோரிக்கை மனு அளித்த மினி கிளினிக் ஊழியர்கள்.

நீலகிரியில் எவ்வித கடிதம் தராமல் வாய்மொழி உத்தரவு மூலம் மினி கிளினிக்குகள் மூடுவதாக அறிவித்தது அதிர்ச்சியளிப்பதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த மினி கிளினிக் ஊழியர்கள் உதகை கலெக்டர் அம்ரித்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், நீலகிரியில் கடந்த ஓராண்டாக ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகள், பஸ் வசதி இல்லாத கிராமங்களில் மினி கிளினிக் மூலம் மக்களுக்கு அடிப்படை மருத்துவ சேவை கிடைத்தது.

நாங்கள் கலெக்டரின் அனுமதி பெற்று நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மினி கிளினிக்குகளில் பணிபுரிந்தோம். பாடந்துறை, ஓவேலி, குந்தலாடி போன்ற பகுதிகளில் மருத்துவ சேவை மூலம் மக்கள் பயனடைந்தனர்.

கொரோனா காலத்தில் எங்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

முறையான ஆணை பெற்று பணியில் சேர்ந்த எங்களை எவ்வித கடிதம் தராமல் வாய்மொழி உத்தரவு மூலம் மினி கிளினிக்குகள் மூடுவதாக அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது.

அதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே,மினி கிளினிக் இயங்க அனுமதி தர வேண்டும் அல்லது மருத்துவத் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil