கன்டோன்மெண்ட் பகுதியில் வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மனு

கன்டோன்மெண்ட் பகுதியில் வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மனு
X

வாரியத்தின் முன்னாள் துணை தலைவர் பாரதியார் தலைமையில் அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வாரிய நிர்வாகம் இந்த நடவடிக்கையைகை விட வேண்டும், தவறினால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் வீடுகளை இடிக்கும் முடிவிற்கு மறுபரீசீலனை செய்ய வேண்டும் என அனைத்து கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது . கன்டோண்மென்ட் வாரியம் ராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ள இந்த வாரியத்தில் 7 வார்டுகள் உள்ளன.

சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வாரியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விதி மீறிய வீடுகளை இடிக்க வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என வாரியத்தின் முன்னாள் துணை தலைவர் எம்.பாரதியார் தலைமையில் அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வாரியத்தின் முன்னாள் துணை தலைவர் எம்.பாரதியார் கூறும் போது, 'வாரியத்துக்கு உட்பட்ட 7 வார்டுகளில் 126 வீடுகள் விதிமீறியதாக கூறி வரும் 26-ம் தேதி இடிக்க முதன்மை செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த வீடுகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், திடீரென இந்த வீடுகள் உடனடியாக இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது.

இந்த வீடுகளை வரண்முறைப்படுத்த உள்ள வாய்ப்பை மக்கள் அளிக்காமல், கால அவகாசம் மற்றும் நோட்டீஸ் கொடுக்காமல் இடிக்க உத்தரவிட்டுள்ளதை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். வீடுகளை இடிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!