திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு

திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு
X

பைல் படம்.

வெள்ளிக்கிழமை முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட திருமுருக பக்தர்கள் பேரவை சார்பில், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. வருகிற மாதங்கள் விழா காலங்களாக உள்ளது. வருகிற அக்டோபர் 7-ம் தேதி நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. இதையொட்டி பெண்கள் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு செய்வதும், திருவிளக்கு வழிபாடு செய்வதும் வழக்கம். எனவே, வார நாட்களை போல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!