நீலகிரியில் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்றே ட்ரோன் கேமரா பயன்படுத்த வேண்டும்

நீலகிரியில் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்றே  ட்ரோன் கேமரா பயன்படுத்த வேண்டும்
X

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆளில்லா பறக்கும் கருவிகள் (Drone Camera)உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களால் கொண்டாடப்படும் பலதரப்பட்ட விழாக்களான திருமணம், காதணிவிழா மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் புகைப்படங்கள் எடுப்பதற்காக உள்ளரங்க பறக்கும் புகைப்படக் கருவி (Drone) அனுமதியின்றி உபயோகிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்துமத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆளில்லா பறக்கும் கருவிகள்உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில முக்கிய தருணங்களில் மட்டும் பறக்கும் புகைப்படக் கருவிகளை உபயோகப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் முன் அனுமதிபெற்ற பின் தான் இயக்கப்பட வேண்டும்.

அவ்வாறு விதிமுறைகளை மீறி உபயோகப்படுத்தப்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய சட்டவிதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இனி வருங்காலங்களில் இந்த பறக்கும் புகைப்படக் கருவிகள் (Drone) உபயோகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயமாக முன் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story