நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி, தூய்மை பணி விறு, விறு
நீலகிரி சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகிவிட்டது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பூங்காக்களை திறக்க தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போதுவரை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று புதிய ஊரடங்கு தளர்வு முறையை அறிவித்துள்ளது. இதில் உயிரியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுலா தலங்கள் அனைத்திலும் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கொரோனோ விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பெயர் பலகைகள் வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu