நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
X

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்களை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி பெற்று கொண்டார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகளை மனுக்களாக அளித்தனர். தொடர் மழை காரணமாக மனுக்கள் அளிக்க பொதுமக்கள் குறைவாக வந்திருந்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்களை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய காரணமின்றி மனுக்களை நிராகரிக்க கூடாது என்று கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!