உதகை பர்ன் புட் ஏரியை மீட்டெடுக்க மக்கள் பண்பாடு இயக்கம் கலெக்டரிடம் மனு
கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மக்கள் பண்பாடு இயக்கத்தினர்.
உதகை நகராட்சிக்குட்பட்ட தலையாட்டுமந்து பகுதியில் 57 ஹெக்டரில் ஆங்கிலேயர் காலத்தில் பர்ன் புட் ஏரி இருந்துள்ளது.
இந்த ஏரி தொட்டபெட்டா மற்றும் வேல்வியூ மலைகளின் இடையே அமைந்திருப்பதால் எந்த நேரமும் தண்ணீர் இருக்கும் இடமாக இருந்துள்ளது.
கடந்த 1963-ஆம் வருடம் கடுமையான மழை வெள்ளத்தால் நிலம் சரிந்து ஏரியின் பரப்பளவு குறைந்து மூடப்பட்டுவிட்டது. இதனை பயன்படுத்தி சிலர் ஏரியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த ஏரியை மீட்டெடுக்கும் வகையில் பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு என்பவர் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் நிலையாக இருந்த ஏரி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விளை நிலங்களாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. நீலகிரியில் தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும் ஆண்டிற்கு 12 மாதம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளும் தண்ணீர் வழங்கும் வசதி கொண்ட இந்த பர்ன் புட் ஏரி தற்போது தனியார் பிடியில் சிக்கியுள்ளது.
எனவே இந்த ஏரி இருக்கும் அப்பகுதியில் ஒரு அணையை உருவாக்கினால் நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு நாள்தோறும் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் அரசு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் மீட்டெடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் இதுகுறித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu